வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஜனவரி 2024 (15:29 IST)

போதை ஊசி செலுத்திய இளைஞர் திடீர் மரணம்..! சென்னையில் அதிகரிக்கும் போதை கலாச்சாரம்..!!

drug dead
சென்னையில் போதை ஊசி செலுத்திய இளைஞர் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை வியாசர்பாடி எம்.என் கார்டன் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் தீபக் 23. இவர் 11 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்து வந்தார். நேற்று மாலை 3 மணி அளவில் புளியந்தோப்பு பி.எஸ் மூர்த்தி நகர் ஜே பிளாக் பின்புறம் நிற்க முடியாமல் தள்ளாடி கொண்டிருந்தார்.

அதன் பிறகு செல்போன் மூலம் தனது நண்பர் செல்வம் என்பவரை அழைத்து என்னால் நடக்க முடியவில்லை வந்து அழைத்து செல்லுமாறு  கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற செல்வம் அவரை பார்த்தபோது தீபக் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரது பக்கத்தில் இரண்டு  ஊசிகள் இருந்தது.  போதை ஊசியை தீபக் பயன்படுத்தியது தெரிய வந்தது.
stanly


உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செல்வம் அழைத்துச் சென்றார். அங்கு இருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது தீபக் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.