திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (09:27 IST)

இன்று 3 மாவட்டங்களில் மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

rain
இன்று மூன்று மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்தவகையில் இன்று விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருச்சி, கோவை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதியில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva