1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 அக்டோபர் 2021 (16:56 IST)

அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை!

அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வருகிறது என்பதும் இந்த மழை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் கிட்டத்தட்ட நிரம்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.