1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கொட்டப்போகுது மழை: வானிலை ஆய்வு மையம்!

rain
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 29-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், நீலகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் அக்டோபர் 27, 28, 29 ஆகிய நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்தி திணிப்புக்கு எதிராக வைரமுத்து ஆர்ப்பாட்டம்: நெட்டிசன்கள் சரமாரி கேள்வி