இன்னும் சிறிது நேரத்தில் 18 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்
இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களான ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை,விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை முதல் கனமழை இன்னும் சில நிமிடங்களில் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதேபோல் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Edited by Mahendran