வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (07:33 IST)

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

மேலும் நேற்று இரவு கூட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனமழை எதிரொலி காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா என்பவர் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து இன்று இந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீலகிரி கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை செய்யும் என்றும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva