வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (19:54 IST)

நேப்பியர் பாலம் - கலங்கரை விளக்கம் இடையே ரோப்கார்: சென்னை மேயர் அறிவிப்பு

priya
சென்னையின் அடையாளங்களில் நேப்பியர் பாலம் மற்றும் கலங்கரை விளக்கம் ஆகியவை உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சென்னை நேப்பியர் பாலம் மற்றும் கலங்கரை விளக்கம் இடையே ரோப்கார் இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக சென்னை மேயர் பிரியா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
நேப்பியர் பாலம் மற்றும் கலங்கரை விளக்கம் இடையே ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் என்று மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார்
 
கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் இதுகுறித்து ஒப்புதல் பெற்று இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கலங்கரை விளக்கம் மற்றும் நேப்பியர் பாலம் இடையே ஏற்பட்டால் சென்னை மக்களுக்கு அது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran