1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (10:34 IST)

இயக்குனர் ஆர்கே செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு: சென்னையில் பதற்றம்

Selvamani
ஆர்கே செல்வமணியின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து உள்ள சம்பவம் சென்னையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் கணவரும் தமிழ் திரைப்பட இயக்குனருமான ஆர்கே செல்வமணி அவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த காரின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து உள்ளதாக தெரிகிறது
 
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள செல்வமணியின் வீட்டில் நடந்த இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் 
 
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் கார் கண்ணாடியை உடைத்தவர்கள் பிடிபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran