வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 மே 2024 (11:37 IST)

சென்னையில் பக்கத்து வீட்டுக்காரரை கடித்த நாய்.. மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை.

சென்னை மதுரவாயலில், வளர்ப்பு நாய் பக்கத்து வீட்டுக்காரரை கடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நாயை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை மதுரவாயலில், வளர்ப்பு நாய்  கடித்து படுகாயம் அடைந்த ரமேஷ் குமாருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு காலில் 2 தையல் போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷ் குமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில் நாயை  மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து சென்றனர்.
 
இந்த நிலையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறும் இணையதளம் முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில், செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் மாநகராட்சியின் இணையதளம் முடங்கியதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் முடங்கிய நிலையில் இன்று மாலைக்குள் சரி செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 1,165 செல்லப்பிராணிகளுக்கு சென்னை மாநகராட்சி உரிமம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran