1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 15 மே 2024 (06:46 IST)

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு.. மாற்று ஏற்பாடு செய்த நிர்வாகம்..!

metro rail
சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் இடையே செல்லும் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அடுத்து மெட்ரோ நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது என்பதும் போக்குவரத்து இடையூறு இன்றி குறைந்த கட்டணத்தில் மிக விரைவாக தாங்கள் செல்லும் இடத்திற்கு பயணிகள் சென்று வருவதால் மெட்ரோ ரயில் சேவைக்கு நாளுக்கு நாள் பயணிகளின் ஆதரவு பெருகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இன்று ஒரு சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
எனவே விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் சென்று அங்கிருந்து பச்சை வழித்தடத்தில் பயணம் செல்ல அறிவுறுத்தப்பட்ட உள்ளனர். இதனால் பயணிகளுக்கு சில அசெளகரியங்கள் இருந்தாலும் இந்த மாற்று ஏற்பாடு காரணமாக பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்
 
Edited by Siva