1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 13 மே 2023 (21:04 IST)

ரசிகர்களைக் கவர்ந்த ஜெய்-ன் ''தீராக் காதல்'' பட டிரெயிலர்

theera kadhal
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள தீராக் காதல் பட டிரெயிலர் 2 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜெய். இவர், சென்னை 28, சுப்ரமணியபுரம், புகழ், ராஜா ராணி, வாமனன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடித்துள்ள படம் தீராக் காதல். ரோஹின் வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்துள்ள இப்படத்தை லைகா தயாரித்துள்ளது.

சித்துகுமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் முதல் சிங்கில் சில நாட்களுக்கு முன் வெளியானது.  இந்த   நிலையில், இப்படத்தின் டிரைலர் 3 நாட்களுக்கு முன் வெளியான நிலையில், இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இதனால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.