கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிய சென்னை ஐஐடி! – பாதிப்பு எண்ணிக்கை உயர்வு
சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மேலும் பல மாணவர்களுக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் நேற்று நடத்திய சோதனையில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சோதனையில் மேலும் 79 பேருக்கு கொரொனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை ஐஐடி கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. இதற்கு கொரோனா விதிமுறைகளை ஐஐடி நிர்வாகம் சரியாக பின்பற்றாததே காரணம் என கூறப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.