வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (11:05 IST)

பிரபாஸ் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் – 20 கோடி வரைக்கும் செல்லும் ஆஃபர்!

பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால் முழுமையான நடிகர் என அழைக்கப்படுகிறார். இவர் 60 வயதிலும் மலையாள சினிமாக்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அவ்வபோது மற்ற நடிகர்களுடனும் சேர்ந்து நடிக்கிறார். இந்நிலையில் இப்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

இதற்காக அவருக்கு 20 கோடி ரூபாய் வரை சம்பளம் தர தயாரிப்பு தரப்பு தயாராக உள்ளதாம். இந்த படத்தை கே ஜி எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே பாகுபலி வில்லன் ராணா டகுபதி வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதில் பிரபாஸ் அடுத்த ஆண்டு முதல் நடிக்க உள்ளார்.