வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (11:12 IST)

கொரோனாவைத் தாண்டிவரும் ஜாக்கி சானின் வான்கார்ட் – மிரட்டும் டிரைலர்!

ஜாக்கி சான் நடிக்கும் வான் கார்ட் படத்தின் டிரைலர் இந்தியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக்கி சான் இப்போது ஆக்‌ஷன் படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டு வருகிறார். ஆனாலும் அவர் ரசிகர்களுக்காக அவர் சில படங்களில் நடிக்கிறார். அப்படி நடித்த படம் தான் வான்கார்ட். இந்த படம் சீனாவில் ஜனவரி 30 ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக செப்டம்பர் மாதம் ரிலீஸானது. அங்கு பெரிய வெற்றியைப் பெற்ற அந்த திரைப்படம் இப்போது இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில் வான்கார்ட் படத்தின் டிரைலர் இந்தியாவில் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஜாக்கி சானின் வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.