திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (08:57 IST)

அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட உத்தரவு!

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி; பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை
 
 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
 
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை நடத்த மட்டுமே அனுமதி என்றும் டாஸ்மாக் பார்களை நடத்த சட்டத்தில் அனுமதி இல்லை என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பார்களையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது
 
டாஸ்மாக் கடைகளில் பார்களை நடத்த சட்டத்தில் இடமில்லை என்றும் மது பானங்களை மட்டுமே சட்டத்தில் அனுமதி உண்டு என்றும் சென்னை ஐகோர்ட்டு அரசு உத்தரவில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில மாதங்களில் டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்படும் என தெரிகிறது