வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:56 IST)

பார்த்திபன் படத்தில் 3 ஆஸ்கார் விருது பெற்றவர்கள்- பிரபல எழுத்தாளர் ஆருடம்

''இரவின் நிழல்'' படத்திற்குப் பிரபல எழுத்தாளர் ஆருடம் சூட்டியுள்ள நிலையில் இதை நடிகரும் இயக்கு நரும் நடிகருமான பார்த்திபன்  நன்றி தெரிவித்துள்ளார்.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில்  இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.

இந்நிலையில், இரவில்  நிழல் படத்தில்  ஏ.ஆர்.ரஹ்மான், சவுண்ட் இன்ஜினியர்  கிரெய்க் மேன்,  விஎஃப் எக்ஸ்  சூப்பர்வைசர் கேட்டலங்கோ லியோன் ஆகிய மூவரும் ஆஸ்கார் விருது பெற்றவர்கள் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உலகம் முழுவதும்  அதிகரித்துள்ளது.

இதற்கு எழுத்தாளர் மதுமதி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து, நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘யாரிடம் கேட்டாலும் இப்படி ஒரு ஆரூடம் சொல்லமாட்டார்கள்! ஊக்கம். நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.