வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 12 ஜூலை 2023 (07:45 IST)

அமைச்சர் துரைமுருகன் மகன் மீதான வழக்கு: ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மகனும் மக்களவை எம்பி விமான கதிர் ஆனந்த் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழக அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம் பி ஆக உள்ளார் என்பதும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் வருமானவரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கதிர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
திமுக எம்பி கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மனு இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Edited by Siva