1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (14:07 IST)

கரூரில் மீண்டும் வருமானவரித்துறை சோதனை.. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு..!

கரூரில் ஏற்கனவே இரண்டு முறை வருமானவரித்துறையினர் சோதனை செய்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இன்று சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கரூரில் உள்ள ராயனூர் என்ற பகுதியில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்பவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி முதல் கட்ட சோதனை நடந்தது. அதனை அடுத்து ஜூன் 23ஆம் தேதி இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. 
 
தற்போது மூன்றாவது கட்டமாக கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran