1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai High court order about Siva sankar baba case

சிவசங்கர் பாபா வழக்கு: உத்தரவை திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்

Sivasankar Baba
சிவசங்கர் பாபா வழக்கில் பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில் ஹரி பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மாணவர் ஒருவரின் தாயாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார் 
 
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டார். ஆனால் இந்த வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னையில், உலக புத்தக கண்காட்சி: அமைச்சர் கே.என். நேரு தகவல்