1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2023 (16:52 IST)

என்னைப் பிடிக்காதவர்கள் நான் நடிக்கும் படங்களை பார்க்காதீர்கள்.. பிரபல நடிகர்

cinema
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராதாரவி என்னைப் பிடிக்காதவர்கள் நான் நடிக்கும் படங்களை பார்க்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராதாரவி. இவர் 80, 90 களில் ரஜினி, கமல், விஜய்காந்த் போன்ற  நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வந்தார்.

தற்போது சினிமாவில்  குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதுடன், பாஜகவில் இணைந்து அக்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
Radharavi

இந்த நிலையில்,  நடிகர் டேனியின் பயிற்சி நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். இனந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் 49 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன்.400 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன்.   என்னோடு நடிக்கும் சக நடிகர்களே என் முகம் பரீச்சயம் ஆகிவிடக்கூடாது என யோசிப்பார்கள்…நான் மனதில் பட்டதை பேசிவிடுவேன். என்னைப் பிடிக்காதவர்கள் நான் நடிக்கும் படங்களை பார்க்காதீர்கள்..  நான் ஹீரோ சார்ந்து எடுக்கும் படங்களில் நடித்து வருகிறேன். என்னை உதாசீனப்படுத்தினால் உங்கள் ஹீரோக்களை உதாசீனப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும், உங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாதீர்கள்…கடைசிவரை வைத்து காப்பாற்றுங்கள்…கடவுள்  உங்களை வாழ் நாள் முழுவதும் ஆசீர்வதிப்பார் என்று கூறினார்.