வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (16:42 IST)

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: ஆகஸ்ட் 5-ஆம் தேதி இறுதி விசாரணை!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது 
 
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அவ்வப்போது நடைபெற்றுவரும் நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெற இருப்பதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது
 
இந்த இறுதி விசாரணை முடிந்த பின்பு அதனை அடுத்து ஒரு சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்தே முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் எதிர்கால அரசியல் வாழ்வு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
திமுக ஆட்சி ஏற்பட்ட பின் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கின் முதல் தீர்ப்பு இந்த வழக்கின் தீர்ப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது