1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (17:08 IST)

ஆளுங்கட்சி அமைச்சரின் நண்பர் வீட்டில் ஐடி ரெய்டு: சிவகாசியில் பரபரப்பு

சிவகாசியில் ஆளுங்கட்சி அமைச்சரின் நண்பர் ஒருவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு உள்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இது குறித்து திமுக பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
எதிர்க்கட்சியினர் மட்டுமே வருமான வரித் துறையால் குறி வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் அதிரடியாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ய நுழைந்துள்ளனர்.
 
சிவகாசி அருகே திருத்தங்கல் என்ற பகுதியில் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் கட்சி பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதால் தற்போது எதிர்க்கட்சியினர் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.