ஆவினில் இருந்து 1.5 டன் இனிப்புகள் ராஜேந்திர பாலாஜிக்கு இலவசமாக அளிக்கப்பட்டதா?

Last Updated: திங்கள், 5 ஜூலை 2021 (10:31 IST)

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீபாவளி காலத்தில் 1.5 டன் ஆவின் இனிப்பு வகைகள் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி பால்வளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு கணக்கு வழக்கில்லாமல் அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் இனிப்பு வகைகள் சென்றுள்ளன. அதுமட்டுமில்லாமல் தீபாவளி சமயத்தில் 1.5 டன் இனிப்பு வகைகள் அனுப்பப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :