தொடர்புடைய செய்திகள்
- 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மம்தா பானர்ஜி!
- 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்திருக்ககூடாது: காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம்
- 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம்: இன்று மாலை அமைச்சர் முக்கிய ஆலோசனை
- செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு
- சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு: விரைவில் அறிவிப்பு
12ஆம் வகுப்பு தேர்வு ரத்துக்கு இடைக்கால தடையா?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து என தமிழக அரசு உறுதி செய்ததை அடுத்து அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராம்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்
இந்த மனுவில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்ட பிறகு தான் இது குறித்து முடிவு எடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்
இந்த நிலையில் ராம்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு வரும் 23-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. இந்த விசாரணையின் முடிவில் தான் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லுமா? என்பது தெரிய வரும்.
அடுத்த கட்டுரையில்
