செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 ஜூன் 2021 (08:05 IST)

12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்திருக்ககூடாது: காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம்

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அதிருப்தியை அளித்தது
 
சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் 12ம் வகுப்பு தேர்வை பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்ற கருத்து கூறியது. பாஜக பாமக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் மட்டுமே 12ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டாம் என்று கூறியது 
 
இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கருத்துக்களை மீறி 12ம் வகுப்பு தேர்வு ரத்து என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அதிருப்தி அடைந்தாலும் வெளியே எதுவும் கருத்து சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முதல் முதலாக காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்திக் சிதம்பரம் அவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்திருக்க கூடாது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது