தொடர்புடைய செய்திகள்
- செந்தில் பாலாஜியை கைது செய்ய கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு
- "துக்ளக் ஆசிரியரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச நடந்த முயற்சிக்கு... திருமாவளவன் கண்டனம் !
- திருமாவளவனும், கி.வீரமணியும் பண்பாடு குறித்து பேசுவதா? எச்.ராஜா
- ”சங் பரிவார் சதிக்கு பலியாகாமல் இருங்கள்”; ரஜினியை எச்சரிக்கும் திருமா
- இவங்க தயவு இல்லாம பிழைக்க முடியாதுப்பா... சீமானுக்கு திருமா அட்வைஸ்?
அதிமுக எம்.,எல்.ஏ வெற்றி செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக போட்டியிட்ட முருகுமாறன் வெற்றி பெற்ற நிலையில் அவரது வெற்றியை எதிர்த்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்த மனு தொடர்ந்த மனு மீதான விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது
இந்த நிலையில் இந்த வழக்கின் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின்படி 2016ஆம் ஆண்டு காட்டுமன்னார்கோவிலில் அதிமுகவின் முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது
மேலும் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்யக்கோரி அதிமுக எம்எல்ஏ வெற்றிக்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
