திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (13:32 IST)

மாசடைந்த மாசு கட்டுப்பாட்டு வாரியம்! – அதிகாரி வீட்டில் கட்டு கட்டாக பணம்!

தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணத்தை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் மாசடைந்து விட்டதாகவும், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தை முறைகேடுகள் அதிகரித்துள்ளதாகவும் மதுரை கிளை நீதிமன்றம் வருத்தம் தெரிவித்திருந்தது. அதை உண்மையாக்கும் வகையில் நாகப்பட்டினத்தில் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டிணம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் சுற்றுசூழல் துறை பொறியாளராக பணியாற்றுபவர் தன்ராஜ். இவரது வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 62 லட்ச ரூபாய் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாகப்பட்டிணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.