1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (12:56 IST)

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் ஐடியா இல்லை – மத்திய அரசு!

தமிழகத்தில் கொங்கு நாடு தனிசர்ச்சை தொடர்ந்த நிலையில் தமிழகத்தை பிரிக்கும் எந்த திட்டமும் இல்லை  என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தமிழ் தினசரி ஒன்றில் தமிழகத்திலிருந்து கொங்குநாடு என்று தனி மாநிலம் பிரிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக வெளியான செய்தி கரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பாஜக இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பயோவில் கொங்கு நாடு என்று சேர்த்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசு கொங்கு மண்டலத்தை பிரிக்க பரிசீலிக்கிறதா என்பது குறித்து எம்.பி. பாரிவேந்தன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர் நித்யானந்த் ராய், தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எந்த திட்டமும், பரிசீலனையும் மத்திய அரசுக்கு இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.