1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamalhassan says BJP double act in Megadadu issues

மேகதாது விஷயத்துல பாஜக ரெட்டை வேஷம் போடுது! – கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

Tamilnadu
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் விவகாரத்தில் இரட்டை வேஷம் போடுவதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக பாஜக அரசின் அணைக்கட்டும் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பாஜக அரசிடம் தமிழகம் முறையிட்டு வரும் நிலையில், தமிழக பாஜகவும் ஆதரவாக போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “இந்தியாவில் அதிக இரட்டை வேடம் ஏற்றவன் நான், அப்படி இரட்டை வேடம் போடுபவர்களை நான் வெகுவாக அறிவேன். மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்தான் போடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
மருத்துவரிடம் ₹ 2.50 லட்சம் நூதன கொள்ளை!