1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 டிசம்பர் 2018 (13:47 IST)

சென்னைக்கு ஆபத்து இருக்கா? இல்லயா? புயல் குறித்த அப்டேட்

கடந்த நவம்பர் மாதம் கஜா புயல் தாக்கி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த புயல் கரையை கந்த போது சுமார் 120 கிமீ வேகத்தில் காற்று வீசியது. 
இந்நிலையில் இதே போன்று தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என கூறியிருந்த நிலையில், அதன்படி இன்று மதியம் புயல் உருவானது. 
 
தற்போது இந்த புயல் சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில் 960 கிமீ தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கில் 1130 கிமீ தொலைவிலும் இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 700 கிமீ தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது.
 
புயல் இதே திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (16 ஆம் தேதி) காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று சென்னையை நெருங்கும். அன்று மாலை வரை சென்னை அருகே மையம் கொண்டு இருக்கும். 
அதன் பிறகு வடக்கு திசையில் ஆந்திரா நோக்கி நகரும். அடுத்து 17 ஆம் தேதி இரவு மசூலிப்பட்டினத்துக்கும் அமலாபுரத்துக்கும் இடைப்பட்ட பகுதியான ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும். 
 
இதனால் தமிழகத்தின் சென்னை மற்றும் வட கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு எந்த ஆபத்தும் இருக்காது என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.