தமிழகத்தில் புயல், கன, மழை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளதால் நாளை டிசம்பர் 14 முதல் டிசம்பர் 17 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதியில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியகடல் பகுதியில் உருவாக இருந்த காற்றழுத்த பகுதியானது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாகவும் இன்று மாலை 5:30 மணியளவில் இலங்கை ஒட்டிய வங்கக்கடல் பகுதி நோக்கி நகர உள்ளதாகவும். இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர மண்டலமாக மாறி, புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
இந்த புயல் சின்னமானது வடமேற்கே நகர்ந்து ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 72 மணி நேரத்தில் இருக்கும்.
காற்று 45 முதல் 56 கிமீட்டர வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் ஆழ்கடலுக்குள் மின்பிடிக்க சென்றவர்கல் உடனடியாக கரை திரும்பவும் அறிவிக்கப்பட்டுள்ளது.