வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (11:29 IST)

சென்னை அரசுப்பள்ளியின் சுவர் இடிந்தது: விடுமுறை என்பதால் சேதம் தவிர்ப்பு!

சென்னை அரசுப்பள்ளியின் சுவர் இடிந்தது: விடுமுறை என்பதால் சேதம் தவிர்ப்பு!
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இன்று பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பதால் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை
 
இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தபோது அந்த பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்த காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன
 
மேலும் சுற்றுச் சுவரின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும் பலத்த சேதம் ஆகியுள்ளது அந்த சிசிடிவி காணொளிகள் காணமுடிகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது