திங்கள், 26 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (19:51 IST)

விண்ணப்பங்கள் கொடுப்பவர்களுக்கே தபால் வாக்குகள் ! தேர்தல் அதிகாரி தகவல்

விண்ணப்பங்கள் கொடுப்பவர்களுக்கே தபால் வாக்குகள் ! தேர்தல் அதிகாரி தகவல்
விண்ணப்பங்கள் கொடுப்பவர்களுக்கே தபால் வாக்குகள்  அளிக்கப்படும் எனச் சென்னை மாவட்ட  தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள்      சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்  பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில் தமிழகத்தில் சில நாட்களாகவே தபால் வாக்குகள் குறித்த பேச்சுகள் பரவலாக இருந்த நிலையில் தற்போது சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் இதுகுறித்த முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.
 
அதில், 80 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மேற்கூறியவர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் தெரிவித்துள்ளார்.