வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (13:27 IST)

இப்போதைக்கு நகைகளை உருக்கக் கூடாது! – அறநிலையத்துறைக்கு உத்தரவு!

கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் வரை நகைகளை உருக்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் காணிக்கையாக வரும் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இந்நிலையில் முதற்கட்டமாக சில கோவில்களில் நகைகளை உருக்க உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் வரை தங்க நகைகளை உருக்க வேண்டாம் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.