செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 1 அக்டோபர் 2022 (16:54 IST)

6 மாதங்களில் ரூ.945 கோடி வரி வசூல்.. சென்னை மாநகராட்சி சாதனை!

Chennai Corporation
சென்னை மாநகராட்சியில் 6 மாதங்களில் ரூபாய் 945 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ரூபாய் 945 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது 
 
கடந்த ஆண்டின் முதல் அரையாண்டில் இது 345 கோடி ரூபாய் அதிகம் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
 
 சென்னை மாநகராட்சி கடந்த சில நாள்களாக வரி வசூல் செய்வதை தீவிரப்படுத்தி வருகிறது என்பதும் அதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் உள்ளவர்கள் முறையாக வரி கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Edited by 
Mahendran