வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 1 அக்டோபர் 2022 (10:00 IST)

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக மழை: எச்சரிக்கை மக்களே!

தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.


வானிலை ஆய்வு மையம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, நடப்பு தென்மேற்கு பருவ மழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 477 மில்லி மீட்டர் மழை பதிவாகியுயள்ளது. இது கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாகும். வழக்கத்தை காட்டிலும் 11 மாவட்டங்களில் மிக அதிக மழையும், 16 மாவட்டங்களில் அதிக மழையும் பொழிந்துள்ளது என கணக்கிட்டுள்ளது.

மேலும் இந்திய வானிலை மையம், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 88% - 112% என்ற அளவில் இருக்கும். செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் தெமேற்கு பருவமழை கணக்கீடு முடிந்து அக்டோபர் 1 முதல் வடகிழக்கு பருவமழை துவங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.