செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 ஜூலை 2021 (17:52 IST)

660 சாலை ஒப்பந்தங்களை ரத்து செய்த சென்னை மாநகராட்சி!

சாலைகள் நன்றாக இருக்கும்போதே அதை புதுப்பிக்கும் விதமாக போடப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சியால் போடப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்கள் தற்போதைய சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன் தீப் சிங் பேடியால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் பொறுப்பேற்ற கொண்ட அவர் இந்த ஒப்பந்தங்கள் மீது பொறியாளர் குழுவினரை அனுப்பி ஆய்வு மேற்கொண்டார்.

அவர்கள் நடத்திய சோதனையில் சம்மந்தப்பட்ட 3200 சாலைகளும் நல்ல நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அது சம்மந்தமான 660 ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.