தொடர்புடைய செய்திகள்
- எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்: மருத்துவமனை தகவல்
- சளி, இறுமல் இருந்தால் வேலைக்கு போகக் கூடாது! – அரசின் புதிய கட்டுப்பாடுகள்!
- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.46 லட்சமாக உயர்வு
- ஹால்டிக்கெட் வாங்க சிறப்பு பேருந்து – மாணவர்களுக்கு மட்டும் அனுமதி!
- கொரோனாவை வைத்து லட்சக்கணக்கில் கொள்ளை! – மருத்துவமனைகளுக்கு முதல்வர் எச்சரிக்கை!
20 ஆயிரத்தை கடந்த பாதிப்புகள் – சென்னை நிலவரம்!
சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்ததை தொடர்ந்து சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் இருந்தாலும் சென்னை மிகவும் மோசமான அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதுவரை சென்னையில் 20,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 197 பேர் உயிரிழந்துள்ளனர். 10,502 பேர் குணமடைந்துள்ள நிலையில் 10,066 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையின் ஐந்து மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 3,717 ஆக உள்ளது. தண்டையார்பேட்டையில் 2,646 பேரும், தேனாம்பேட்டையில் 2,374 பேரும், கோடம்பாக்கத்தில் 2,323 பேரும், திருவிக நகரில் 2,073 பேரும் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
