திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஜூன் 2020 (09:09 IST)

கொரோனாவை வைத்து லட்சக்கணக்கில் கொள்ளை! – மருத்துவமனைகளுக்கு முதல்வர் எச்சரிக்கை!

கொரோனா சிகிச்சைகளுக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கில் பணம் பெறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதல்வர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் பொதுமுடக்கம் அமலில் உள்ள போதிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு வசூலிக்கலாம் என்ற கட்டணத்தையும் அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை நேரடியாக மருத்துவமனையில் அனுமதிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்க இடைத்தரகர்கள் பலர் செயல்படுவதாகவும் அவர்கள் மூலமாக லட்ச கணக்கில் கணக்கில் வராமல் பணத்தை பெற்றுக் கொண்டு மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முறைகேடாக செயல்படும் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் குறித்து கணக்கெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.