தொடர்புடைய செய்திகள்
- கல்லூரியிலும் எல்லாருக்கும் ஆல் பாஸ் போடுங்க! – டிடிவி தினகரன் கோரிக்கை!
- சிறுமிக்கு ஆபாசப்படம் காட்டி சீரழித்த சிறுவர்கள்! – கோவையில் அதிர்ச்சி!
- 4.25 லட்சமாக உயர்ந்த கொரோனா பாதிப்புகள்: மாநிலவாரி நிலவரம்
- சென்னையில் வீடு வீடாக சென்று காய்ச்சல் சோதனை… தடுப்புப் பணிகள் தீவிரம்!
- சானியா மிர்சாவை பார்க்க இந்தியா வரும் கணவர்- சிறப்பு அனுமதி!
41 ஆயிரத்தை தாண்டிய சென்னை பாதிப்புகள்; மண்டலவாரி நிலவரம்!
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 1,523 ஆக உள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு சென்னையில் 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,288 பேரும், தண்டையார் பேட்டையில் 5116 பேரும், தேனாம்பேட்டையில் 4,967 பேரும், கோடம்பாக்கத்தில் 4,485 பேரும், அண்ணா நகரில் 4,385 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பல மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மணலி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் ஆயிரத்தை நெருங்கி வருகின்றன.
அடுத்த கட்டுரையில்
