தொடர்புடைய செய்திகள்
- எம்ஜிஆருக்கு கோவிலே இருக்கு; இதெல்லாம் பிரச்சினையே இல்ல! – வக்காலத்துக்கு வந்த அர்ஜுன் சம்பத்
- சமூக நீதிக்கான வெற்றி - சமூக நீதிக்கான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
- ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டம்! – உயர்நீதிமன்றம் பரிந்துரை!
- இனிமே நகையே வேணாம்யா... ரூ.40,000-த்தை நெருங்கும் தங்கம்!
- சீமான் கைது? விஜயலட்சுமி வாக்குமூலத்தால் வழக்கு பாயுமா??
ஆன்லைன் விளையாட்டில் தோல்வி: கல்லூரி மாணவர் தற்கொலை!
சென்னையில் ஆன்லைன் விளையாட்டில் மோகம் கொண்ட மாணவர் அதில் பணத்தை இழந்ததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தக்கரை பகுதியை சேர்ந்தவர் நித்திஸ். கல்லூரி மாணவரான இவர் சமீப காலமாக அங்குள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆன்லைன் சூது விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட நித்திஸ் தொடர்ந்து அதில் பணம் செலுத்தி விளையாடி வந்திருக்கிறார். அதில் பல முறை தோல்வியடைந்து பணத்தை இழந்துள்ளார்.
தனது முழு பணத்தையும் இழந்த நிலையில் தான் பணிபுரிந்த கடையில் இருந்த பணத்தையும் திருடி விளையாடி தோற்றதாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியடைந்த நித்திஸ் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
