1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Collector tested corona positive

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

சென்னை மாவட்ட ஆட்சியர்
சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸ்க்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் பலரும் பாதிக்கப்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சையில் உள்ளனர் 
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரான சென்னை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரனோ தோற்று பணியில் தீவிரமாக இருந்த மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது
 
இந்த நிலையில் அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு கொரனோ தோற்று ஏற்பட்டுள்ளது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது