புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (08:40 IST)

சென்னைவாசிகளே என்ஜாய்... இரண்டு நாளைக்கு நல்ல மழை இருக்காம்...!!

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை உண்டு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னைவாசிகளை வெயில் வாட்டி வதைக்கும் சூழ்நிலையில் நாளை மற்றும் நாளை மறுதினம் மழை பெய்யும் வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலில் தாக்கத்தை தவிர்த்து தண்ணீருக்காகவும் மழை வேண்டி காத்துகிடக்கின்றனர் மக்கள். 
 
ஆனால், இன்று அனல் கார்று வீசினாலும் 15 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தின் வெப்பத்தின் அளவு குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் மழை துவங்கினாலும், சென்னைக்கு மழை என்பது பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்த நிலையில் அது இப்போது சாத்தியமாக உள்ளது.