திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (09:11 IST)

சென்னையில் சீட்டு மோசடி; பாஜக தேர்தல் பொறுப்பாளர் கைது!

சென்னையில் சீட்டு நடத்தி பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் தேசிய கட்சியான பாஜகவும் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பாஜக வடசென்னை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட வி.எஸ்.சீனிவாசன் என்பவர் சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி கனக துர்கா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.