1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai bicycle thief arrested by police

என்னோட டார்கெட் சைக்கிள் மட்டும்தான்! – சென்னையில் பிரபல சைக்கிள் திருடன் கைது!

Chennai
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக சைக்கிளை குறி வைத்து ஆட்டைய போட்டு வந்த திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் முக்கிய பகுதிகளான மேற்கு மாம்பலம், அசோக் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சைக்கிள்கள் மாயமாவது கடந்த சில மாதங்களாக தொடர் கதையாக இருந்து வந்துள்ளது.

அப்பார்ட்மென்ட் வாசிகள் பயன்படுத்தும் உயர்ரக சைக்கிள்களும் தொடர்ந்து திருட்டு போன நிலையில் இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் பெரும்பான்மையான சைக்கிள் திருட்டு கேஸ்களில் ஒரே ஆள் சம்பந்தப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்து வந்த போலீஸார் அப்பகுதியில் சைக்கிள் திருட்டு ஸ்பெஷலிஸ்டாக இருந்த பாபுவை கைது செய்துள்ளனர். தினசரி ஒரு சைக்கிளையாவது திருடிவிடும் பாபு அதை ரூ.2 ஆயிரம் ரூபாய் வரை விற்றுவிட்டு அந்த காசில் மது அருந்துவது, உல்லாசமாக ஊர் சுற்றுவது போன்றவற்றை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரபல சைக்கிள் திருடன் பிடிபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
யுக்ரேன் போர்: ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் - 22 பேர் பலி