1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (07:47 IST)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது
 
 இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கச்சா எண்ணெய் விலை 95 டாலருக்கும் குறைவாக விற்பனை ஆகி வருவதால் விரைவில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது