திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 டிசம்பர் 2022 (12:18 IST)

சென்னை அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா நினைவிடங்கள் மூடல்!

Jayalalitha memorial
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில் சென்னை மெரினா கடற்கரை அருகே புயல் காரணமாக இரண்டு மரங்கள் சரிந்து விழுந்துள்ளன
 
இதன் காரணமாக மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் புயலால் இரண்டு மரங்கள் சரிந்துள்ளதால் மெரினாவில் உள்ள அண்ணா எம்ஜிஆர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய நினைவிடங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரு நாள் மட்டும் இந்த நினைவிடங்களைபொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து உள்ள நிலையில் அந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran