திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 8 மே 2021 (07:27 IST)

சென்னை, கோவை கமிஷனர்கள் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் ஒவ்வொரு முறை புதிய அரசு பதவி ஏற்கும்போது முக்கிய ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றுவது வழக்கமான ஒன்றாக உள்ளது 
 
அந்த வகையில் நேற்று தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் அவர்கள் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது சென்னை போலீஸ் கமிஷனர் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் செய்யப்பட்டது குறித்த தகவல் இதோ:
 
1. சென்னை மாநகர கமிஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சங்கர் ஜிவால் என்பவர் சென்னை மாநகர கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
2. உளவுத்துறை டிஜிபியாக கோவை மாநகர போலீஸ் கமிஷனராக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டார். 
 
3. சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளியும் மாற்றப்பட்டார், அவருக்கு பதிலாக தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்