செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (09:00 IST)

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: விசாரணைக்கு முன்வந்த உயர்நீதிமன்றம்!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு. 

 
விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் புகார் கொடுப்பதற்கு இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார் என்றால் சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன என நீதிபதி கேள்வி. 
 
இந்த விவகாரம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் அரசியலமைப்பு சட்டம் நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. மேலும் ஊடகங்கள் இதை விவாத பொருளாக்க வேண்டாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தல். 
 
காவல்துறை பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து  விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் கொடுத்த  விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அரசியல் கட்சிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தல். 
 
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை யாரும் பயன்படுத்தவோ வெளியிடவோ கூடாது எனவும் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை.