வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 14 ஜனவரி 2019 (08:04 IST)

போகி புகையால் பாதிக்கப்பட்ட சென்னை விமான நிலையம்: விமானங்கள் ரத்து

தமிழகம் முழுவதும் இன்று போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பழைய கழிதலும் புதியன புகுதலும் என்ற சொல்லிற்கேற்ப பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய துணிகள் உள்பட பல பொருட்களை சாலையில் போட்டு எரித்து வருகின்றனர்.

போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தும் பொதுமக்கள் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் பழைய பொருட்களை எரித்து வருவதால் சென்னை நகர் முழுவதும் ஒரே புகைமூட்டமாக உள்ளது.

இந்த நிலையில் போகி புகையால் ஏற்பட்ட புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக பெங்களூரு, புனே, திருச்சி, மும்பை, அந்தமானிலிருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள் 2 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் மும்பைக்கு செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.